திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
ஆண்டாள் அவதரித்த பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு இக்கோயிலில் 11 நாட்கள் ஆடிப்பூர உற்சவம் நடைபெறும். ஜூலை 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை சுவாமி புறப்பாடு, இரவில் வாகனத்தில் ஆண்டாளுடன் பெருமாள் திருவீதி உலா நடந்தது. (5.8.16) வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு ஆண்டாளுடன் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளினர். பக்தர்கள் காலை முதல் தேரில் எழுந்தருளிய பெருமாள் ஆண்டாளை தரிசித்து சென்றனர். மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. 6.8.16 காலை தீர்த்தவாரி, இரவில் தங்கப்பல்லக்கில் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும்.