ஊத்துக்கோட்டை: திருவரங்க செல்லியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் ஏந்திச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் ஊராட்சியில் உள்ளது. திருவரங்க ஸ்ரீசெல்லிஅம்மன் கோவில். இக்கோவிலில் ஆடிமாதத்தை ஒட்டி, மூன்றாம் ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி, கிராமவாசிகள் அம்மனுக்கு பால்குடம் ஏந்திச் சென்றனர். அங்குள்ள பஜனைக் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது. அங்கு பக்தர்கள் தலையில் ஏந்திசென்ற பாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.