செஞ்சி: செஞ்சி குளக்கரை மாரியம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு 108 பால் குடம் அபிஷேகம் நடந்தது.
செஞ்சி மலர் தொடு வியாபாரிகள் சார்பில் கிருஷ்ணாபுரம் மாரியம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு, 28வது ஆண்டாக பூபல்லக்கு விழா (5.8.16) வெள்ளிக்கிழமை நடந்தது. இதை முன்னிட்டு (5.8.16) வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு சத்திரத்தெரு அங்காளம்மன் கோவிலிலிருந்து பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து காலை 11:00 மணிக்கு 108 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பகல் 12:00 மணிக்கு மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். பிற்பகல் 1:00 மணிக்கு அன்னதானமும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை செஞ்சி மலர் தொடு வியாபாரிகள் செய்திருந்தனர்.