சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே உலக நன்மை, ஆடிப்பூரத்தை முன்னிட்டு 1008 அஷ்டோத்தர சக மகா ருத்ர யாகம் நடந்தது.
அதிகாரிபட்டி அருகே காம்பார்பட்டி ஆத்மலிங்கேஸ்வரர் கோயிலில் ஒரு வாரமாக யாகத்திற்காக 1008 ருத்ர பீடங்கள் அமைக்கும் பணி நடந்தது. (5.8.16) வெள்ளிக்கிழமை ஆடிப் பூரத்தை முன்னிட்டு யாகம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. அங்கு 1008 லிங்கங்களைக் கொண்டு கோயில் உருவாக உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.