பதிவு செய்த நாள்
06
ஆக
2016
03:08
ப.வேலூர்: பொத்தனூர் பகவதியம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
ப.வேலூர் அடுத்த, பொத்தனூரில் அமைந்துள்ள, பகவதியம்மனுக்கு ஆடிப்பூரத்தை சிறப்பிக்கும் வகையில் அப்பகுதி மக்கள், அம்மனுக்கு உகந்த மஞ்சளாடை அணிந்து, காவிரி ஆற்றுக்கு சென்று பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
*நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட, வேங்காத்தார் காலனியில் நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் (5.8.16) வெள்ளிக்கிழமை முன்தினம் இரவு பூச்சாட்டுதலுதடன் விழா துவங்கியது. (5.8.16) வெள்ளிக்கிழமை காலை சக்தி அழைத்தல், பூங்கரகம், தீர்த்தக்குடம், அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. திருநங்கைகள் அதிகளவு பங்கேற்று மேளதாளத்துடன், நடனமாடி வந்தனர். தொடர்ந்து, கோவிலில் சிறப்பு வழிபாடு, தீபாராதனை, அபி?ஷக, ஆராதனை நடந்தது.
*குமாரபாளையம் நகரில், மேல்மருவத்தூர் பக்தர்கள் பவானி கூடுதுறை ஆற்றில் புனித நீராடி, தீர்த்தக்குடங்கள், அக்னி சட்டியுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். அது, பவானி பழைய காவிரி பாலம், சேலம் பிரதான சாலை, பள்ளிபாளையம் சாலை வழியாக கிழக்கு காலனி பகுதியில் உள்ள, சுள்ளிமடைதோட்டம் ஆதிபராசக்தி வழிபாடு மையத்தில் நிறைவு பெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனைகள் செய்யப்பட்டது.
*ப.வேலூர் சுல்தான் பேட்டையில் உள்ள பகவதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 5,008 வளையல் அலங்காரமும் நடந்தது.
*மோகனூர் ஒன்றியம், ராசிபாளையம் மாருதி நகரில், ராஜநாலட்சுமி அம்மன் கோவிலில், 16ம் ஆண்டு வளைகாப்பு விழா, நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்யப்பட்டது.