பதிவு செய்த நாள்
06
ஆக
2016
03:08
ஓசூர்: ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரையில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில், ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு விழா (5.8.16) வெள்ளிக்கிழமை நடந்தது.
விழாவையொட்டி பெண்கள் பங்கேற்ற தீச்சட்டி மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏரித்தெரு, எம்.ஜி.,ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் முன்னே செல்ல, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் திருவீதி உலா நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை ஏகாம்பரேஸ்வர காமாட்சியம்மன் கோவிலில், ஆதி சிவலிங்காச்சாரிய பீட இளைய மடாதிபதி சிவராஜ சுவாமிகள் தலைமையில், ஆடிப்பூர திருவிழா நடந்தது. கோமாதா பூஜை, தேவதா அனுக்ஞை, எஜமானார் அனுக்ஞை, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவசனம், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து பால்குட ஊர்வலம், அபிஷேகம், தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.