செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2016 11:08
செஞ்சி: செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் காமாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். இதை முன்னிட்டு காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வளையல் அலங்காரம் செய்தனர். இரவு மகா தீபாராதனையும், சுமங்கலி பெண்களுக்கு சிறப்பு தாம்பூலமும் வழங்கினர். பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார். செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவில் அபிதகுஜாம்பாள் மற்றும் வெங்கடேச பெருமாள் சன்னதி ஆண்டாளுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இதில் திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை மற்றும் அலங்காரங்களை சீனுவாசன் குருக்கள் செய்தார். செஞ்சிகோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் பூதேவி, ஸ்ரீதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். இதில் ஸ்ரீரங்க பூபதி கல்லுாரி இயக்குனர் சாந்தி பூபதி, பார்மஸி கல்லுாரி நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷர்மிளிஸ்ரீ, வழக்கறிஞர் வைகை தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை சுதர்சனம், பொன்னுசாமி பாகவதர்கள் செய்தனர்.