குருவித்துறை கோயிலில் வெள்ளிக் கவசத்தில் குருபகவான்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2016 11:08
குருவித்துறை: குருவித்துறை குருபகவான் கோயிலில் குருபகவான் வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை மாவட்டம் சோழவந்தான் குருவித்துறையில் சுயம்பு குருபகவான் சுவாமி சன்னதி உள்ளது. ஆக.2ல் காலை 9.27 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னிராசிக்கு குருபகவான் இடம் பெயர்ந்தார். இதையொட்டி இங்கு ஏராளமான பக்தர்கள் குருபகவானை தரிசித்தனர். நேற்று சிறப்பு பூஜையை ஒட்டி குருபகவான் வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து 48 நாட்களுக்கு இக்கோயிலில் பரிகாரபூஜையாக அனைத்து ராசிக்காரர்களுக்கும் அர்ச்சனைகள் நடக்கிறது. வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்களுக்கு சிறப்புபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஞானசேகரன், நிர்வாக அதிகாரி விஸ்வநாத் செய்துள்ளனர்.