இருக்கன்குடியில் சாக்கால் மூடிய உண்டியல்கள்: காணிக்கை செலுத்த முடியாமல் பக்தர்கள் தவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2016 02:08
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நிரம்பிய உண்டியல்களை சாக்கு போட்டு முடியுள்ளதால் காணிக்கை செலுத்த முடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர். தற்போது ஆடி மாதம் என்பதால் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு பாதயாத்திரையாகவும், வேன்கள், லாரிகள், பஸ்கள் மூலமாகவும் வந்திருந்தனர். இதனால் கோயிலில் கூட்டம் அலை மோதியது.
நிரம்பிய உண்டியல்கள்: கடந்த சில நாட்களாக பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தால் கோயில் வளாகத்தில் உள்ள பல உண்டியல்கள் நிரம்பின, அன்னதான உண்டியலும் நிரம்பியது. இதை தொடர்ந்து கோயில் நிர்வாகம் மாற்று உண்டியல்கள் வைக்காமல் போனதால் தற்போது பக்தர்கள் காணிக்கை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருடர்கள் கைவரிசை: பெண்கள் தங்கள் காணிக்கையை உண்டிலில் போடமுடியாமல் உண்டியலை சுற்றி கட்டியுள்ள சாக்குகளில் திணித்து செல்கின்றனர். இதை திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். இதனை தடுக்க முடியாமல் போலீசாரும் திணறி வருகின்றனர். வில்வமூர்த்தி, உதவி ஆணையர்: கோயில் உண்டியல்களுக்கு இரண்டு பூட்டுகள் உள்ளன. ஒரு சாவி பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவரிடமும், மற்றொன்று உதவி ஆணையரிடமும் இருக்கும். பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் பதவிக்காலம் முடியும் போது முறைப்படி, ஆணையரிடம் சாவிகளை ஒப்படைக்க வேண்டும். இதற்கு முன் பரம்பரை அறங்காவலர் பதவியில் இருந்தவர் சாவிகளை ஒப்படைக்கவில்லை. சாவி இல்லாததால் பூட்டை உடைத்து திறக்க உயர் அதிகாரிகளின் அனுமதி கேட்டுள் ளேன். கூடுதலாக 6 இடங்களில் உண்டியல்கள் வைக்கவும் ஆணையாளர் , இணை ஆணையரிடம் அனுமதி கேட்டுள்ளேன். அனுமதி கிடைத்தவுடன் கூடுதல் உண்டியல்கள் வைக்கப்படும். , என்றார்.