பதிவு செய்த நாள்
09
ஆக
2016
12:08
காரிமங்கலம்: காரிமங்கலம் மந்தை வீதி ராஜகணபதி கோவிலில், குரு பெயர்ச்சி விழா நாளை (10ம் தேதி) நடக்கிறது. காலை, 8 மணிக்கு பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது. தொடர்ந்து, குரு பகவானுக்கு, சிறப்பு பாலாபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. இதில் மேஷம், மிதுனம், கும்பம், துலாம், கன்னி ஆகிய ராசிகளை சேர்ந்தவர்கள், பரிகார பூஜையில் பங்கேற்று, குருவின் அருள் பெறலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.