பச்சைவாழியம்மன் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2016 11:08
விழுப்புரம்: முண்டியம்பாக்கம் மன்னார்சாமி பச்சைவாழியம்மன் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு யாகம் நடந்தது. விழுப்புரம் அடுத்த முண்டிய ம்பாக்கம் மன்னார்சாமி பச்சைவாழியம்மன் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அர்ச்சகர் கைலாச ரவீந்திரநாத் தலைமையில், சிறப்பு யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.