திருமுறைகளில் தேவாரம் என்பது சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூன்று நாயன்மாரும் பாடிய சமய வழிப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். பத்துப்பாடல்கள் கொண்டது பதிகம் எனப்படும். இன்று நமக்குக் கிடைத்திருப்பன சம்பந்தர் பாடிய பதிகங்கள் 384. பாடல்கள் 4147. இவை 1,2,3, திருமுறைகளாக கருதப்படுகின்றன. அப்பர் பாடிய பதிகங்கள் 312, பாடல்கள் 3066. இவை 4,5,6 திருமுறைகளாகும். சுந்தரர் பாடிய பதிகங்கள் 1000. பாடல்கள் 1026. இவை ஏழாம் திருமுறை. மாணிக்க வாசகர் பாடிய திருவாசகமும், அவர் பாடியதாகக் கூறப்படும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாகும். பாடல்கள் 1056. திருமாளிகைத் தேவர் முதலான அடியார்கள் ஒன்பது பேர் பாடிய திருவிசைப்பாவும், திருப்பல்லாண்டும் 9-ம் திருமுறையாகும். இவற்றின் பதிகங்கள் 29. பாடல்கள் 301. திருமூலர் பாடிய திருமந்திரம் 10-ம் திருமுறையாகும். பாடல்கள் 3047. இறையனார் அருளிய திருமுகப் பாசுரம் தொடங்கி நம்பியாண்டார் நம்பி, எழுதிய பதிகங்கள் இறுதியாக பன்னிரெண்டு ஆசிரியர்கள் பாடிய 1400 கொண்ட 40 நூல்கள் பதினோராந் திருமுறையாகும். சிவனடியார்களின் வரலாறாகக் கருதப்படும் சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம் பன்னிரெண்டாம் திருமுறையெனக் கருதப்படுகின்றது. இதன் பாடல்கள் 4286.