Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்? நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?
முதல் பக்கம் » நவராத்திரி வழிபாடும் சிறப்பும்!
நவராத்திரியில் கொலு வைக்க தயாராகி விட்டிர்களா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 செப்
2011
03:09

செப்.28ல், நவராத்திரி ஆரம்பமாகிறது. இதையொட்டி கொலு வைக்க தயாராகி வருவீர்கள். இந்த வருடம் நவராத்திரக்காக கொலு வைப்பவர்கள் 27.9.2011 அன்று மகாளய அமாவாசையாக இருப்பதால் அன்றைய தினத்தில் நல்ல நேரம் பார்த்து கொலு வைக்கலாம். வருஷம்தோறும் ஒரே மாதிரியான பொம்மைகளை அடுக்கி போரடிச்சு போச்சா! இந்த வருஷம், மேற்குவங்காளத்தில் இருந்து புதுசா புதுசா, சின்னதா, அழகா பொம்மைகள் வந்திருக்கு! அதுபற்றி தெரிஞ்சுகிட்டு வாங்கிட்டு வாங்களேன்! கொலு வைக்கும் போது, ஒற்றைப்படை எண்ணில், மேடை படி அமைப்பது வழக்கம். ஒவ்வொரு வருஷமும், புதுசா மூணு பொம்மையாவது வாங்கவேண்டுங்கிறது சம்பிரதாயம். நம் வீட்டுக்கு மட்டுமல்ல! கோயில்களில் நடக்கிற கொலுவுக்கும் பொம்மை வாங்கிக் கொடுப்பது மிகப்பெரிய கைங்கர்யம். ஆளுக்கு மூணு பொம்மை வாங்கிக் கொடுத்தாலும், ஒரு ஊரே வாங்கிக் கொடுக்கும் போது, கோயிலில் பொம்மைகள் குவிஞ்சிடும்! இந்த வருஷம் பூம்புகார் நிலையங்களுக்கு, தஞ்சாவூர், காஞ்சிபுரம், திண்டிவனம், விழுப்புரம், மதுரை ஆகிய ஊர்களில் இருந்து விற்பனைக்காக பொம்மைகள் வந்துள்ளன. காதிபவன், சர்வோதய சங்கம், பூம்புகார் விற்பனை நிலையங்களுக்கு போனா இதையெல்லாம் பார்க்கலாம்.களிமண், பேப்பர்கூழ், பீங்கான் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்த பொம்மைகள் 15ரூபாயில் இருந்து 1600ரூபாய் வரைக்கும் விற்குது! 

பெங்கால் பொம்மைகள்: பூம்புகார் விற்பனை மையத்தில் நவராத்திரி விழாவிற்காக இந்த ஆண்டு பெங்கால் பொம்மைகள்அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவை கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப் பட்டுள்ளன. வடக்கத்திய கிராமிய ஆண், பெண் பொம்மைகள், காய்கறி விற்கும் பெங்காலி பெண், தச்சர், கொல்லர், குயவர், பூஜை செய்யும் சிவாச்சாரியார், கூடை பின்னுபவர் போன்ற பொம்மைகள் 75ரூபாயில் இருந்து ரூ.120 வரை விற்குது!.

பஜனை கோஷ்டி பொம்மை: பெங்களூரு, மும்பை, திருப்பதி, தமிழகத்திலுள்ள பெரிய நகரங்களில் இஸ்கான் அமைப்பு நிர்வகிக்கும் ராதா கிருஷ்ணன் கோயிலுக்கு நீங்க போயிருப்பீங்க! அங்கே கோஷ்டியாக பஜனை பாடுபவர்களை  பார்த்தால் நமக்கும் ஆடத்தோன்றும். அந்தக் கோஷ்டியை பொம்மையாக வடித்து விற்பனைக்கு அனுப்பியிருக்காங்க! இதற்கு இஸ்கான் செட் பொம்மைன்னு பெயர்.  ஜால்ரா,ஹார்மோனியம், ஸ்ருதி சேர்ப்பவர், பாடுபவர் என்னும் நான்கு பேர் கொண்ட இந்த செட்டின் விலை ரூ.400. நார்த் இந்தியன் தாத்தா பாட்டி பொம்மை செட் எல்லாரையும் கவரும். விலை ரூ170. இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், பாட்டி சொல்றதை சம்மதிப்பது போல தாத்தாவும், தாத்தா சொல்றதைக் கேட்பது போல பாட்டியும் ஸ்பிரிங் கழுத்துடன் தலையாட்டுவது ரசிக்கும்படியா இருக்குது! 

விதவிதமான கிருஷ்ணர்: மகாவிஷ்ணுவின் அவதாரங்களான மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணர், கல்கி ஆகிய தசாவதார செட்டின் விலை ரூ500. குழலூதும் கண்ணன், வெண்ணெய் திருடுபவன், ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், புன்னைவன கிருஷ்ணன், பசுமேய்க்கும் கிருஷ்ணன் என்று விதவிதமான கிருஷ்ணர் சிலைகளும் இருக்குது! விலை ரூ. 200 முதல் ரூ400 வரை. ஆறுகோபியர் கண்ணனைச் சூழ்ந்து நடனமாடும் கோபியர் செட் ரூ400.  செராமிக் என்னும் பீங்கானால் ஆன பிள்ளையார், ஐயப்பன், போகசக்தி அம்பாள் மற்றும் குதிரை, முயல், நாய் சிலைகளும் இங்குள்ளன. இச்சிலைகள் விருத்தாசலத்தில் இருந்து வந்திருக்கு! மெழுகினால் செய்யப்பட்ட காய்கறி, பழங்கள்,லவ்பேர்ட்ஸ், நூலினால் பின்னப்பட்ட பொம்மைகள், ராஜேஸ்வரி சபை செட், பர்வதமலை செட், பெருமாள் செட்டும் புதுரகம்.
தஞ்சாவூர் பொம்மைகள்: தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் காலத்தால் அழியாதவை. குழந்தையின் அழுகையை நிறுத்த, டென்ஷனைக் குறைக்க இந்த பொம்மைகளுக்கு சக்தியுண்டு என்பர். செட்டியார், ஆச்சி, டான்சிங் கேர்ள் என பலவிதமான தலையாட்டி பொம்மைகளும் வந்திருக்கு! விலை ரூ80முதல் ரூ1000 வரை. மயில், குருவி, குயில், கிளி, லவ்பேர்ட்ஸ் ஜோடியாக விற்கப்படுகின்றன. ஒருஜோடி ரூ50க்கும், இரண்டு ஜோடிரூ 75க்கும் உள்ளன.

 
மேலும் நவராத்திரி வழிபாடும் சிறப்பும்! »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிப்பாள். மஹாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். ... மேலும்
 
temple news
பெரிய பதவிகள் அடைய... சந்திரகாந்தா வழிபாடு!: உலகம் அனைத்தும் சக்தி மயம் என்ற தத்துவத்தை விளக்க வந்ததே, ... மேலும்
 
temple news
இன்று அம்பிகையை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். கவுமாரி, குமார கண நாதம்பா என்றும் ... மேலும்
 
temple news
பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ ... மேலும்
 
temple news
விஜயதசமியோடு நவராத்திரி நிறைவு பெறுகிறது. இந்நாளில் பராசக்தியின் மூன்று வடிவங்களான சரஸ்வதி, லட்சுமி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar