சதுரகிரியில் ரோப் கார் அமைப்பு பணி: கிடப்பில் திட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2016 05:08
விருதுநகர்: சதுரகிரி மலை கோயில் ரோப் கார் அமைப்பு பணிக்காக ஆய்வு செய்து இரு ஆண்டுகளாகியும், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சதுரகிரி மலை கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலுருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இம்மலை கோயில் 1,200 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், மலையில் ஆறு கிலோ மீட்டர் கரடு முரடான பாதையில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், சிறுவர்கள் சிரமமடைகின்றனர். சுற்றுலா வளர்ச்சி கழகம் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை விழாபோது பக்தர்கள் சிரமமின்றி கோயிலுக்கு செல்லும் வகையில் மலையடிவார தாணிப்பாறையிலிருந்து கோயில் வரை 6.கி.மீ.,துõரத்திற்கு ரோப் கார் அமைக்க சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் திட்டமிடப்பட்டது. மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் இதற்கான ஆய்வு பணி நடத்த ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது. மெட்ரோ ரயில் அதிகாரிகள் இரு ஆண்டுகளுக்கு முன் மலையடிவார கோயில் வரை ரோப் அமைக்கும் இடங்களை பார்வையிட்டனர்.
ஏமாற்றம்: ரோப் கார் செல்லும் இடங்களில் மலைகள் இடையூறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது . அதன் பின் ரோப் கார் தொடர்பாக எவ்வித பணியும் நடக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். பக்தர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரோப் கார் திட்டத்தை இன்று வரை செயல்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.