அன்னுார்: கரியாம்பாளையம் ஊராட்சி, கிருஷ்ண கவுண்டன்புதுாரில், ஒத்த சடையப்பசாமி கோவில் பொங்கல் திருவிழா நடந்தது. முதல்நாள் மாலையில், ஆதிவிநாயகருக்கு பொங்கல் வைத்தல், யாக பூஜை நடந்தது. இரவு மகா தீபாராதனையும், குதிரை வாகனத்தில், சடையப்ப சாமி திரு வீதியுலாவும் நடந்தது. இரண்டாம் நாளன்று, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல் நடந்தது. மதியம் குதிரை வாகனம் எடுத்தல், பக்தர்கள் ÷ நர்த்திக்கடன் செலுத்துதல் நடந்தது. திருவீதியுலாவில் சுவாமிக்கு, பக்தர்கள் நீர் ஊற்றி வரவேற்பு அளித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.