கோவை: கள்ளப்பாளையம் கருமையம்மன் கோவில் உற்சவத்திருவிழாவில், நேற்று மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. செட்டிபாளையம் அருகே கள்ளப்பாளையத்தில் அமைந்துள்ளது, கருமையம்மன் கோவில். கோவில் உற்சவத்திருவிழா, ஆக., 1ல் நந்தா தீபம் ஏற்றுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் கிராம சாந்தி, அணி எடுத்தல் நடந்தன. நேற்று அதிகாலை, பொங்காளி அம்மன் அழைத்தலும், திருமஞ்சள் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. மதியம், பொங்கல் வைத்து மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இன்று மறுபூஜையும், நாளை நிறைவு பூஜையும் நடக்கிறது.