பதிவு செய்த நாள்
11
ஆக
2016
11:08
ஆர்.கே.பேட்டை: கிராமத்தின் தென் மேற்கு மற்றும் வட கிழக்கு திசையில் உள்ள சிவன், பெருமாள் கோவில்கள் புதர் மண்டி, சீரழிந்து கிடக்கின்றன. புனரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்திரவிலாசபுரம் கிராமத்தில், நு ாறாண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன. கிராமத்தின், வட கிழக்கில், ஏரிக்கரையில் சிவாலயமும், தென் மேற்கில் பெருமாள் கோவிலும் உள்ளன. இரண்டு கோவில்களும், பல ஆண்டுகளாக வழிபாடு இன்றி, புதர் மண்டி கிடக்கின்றன. கோவில் தளத்தில் வளர்ந்துள்ள மரங்களால், கோவில் சிதிலமடைந்து வருகிறது. இதில், ஏரிக்கரையில் உள்ள சிவாலயம் குறித்து, கடந்த ஆண்டு நமது நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், புதர் அகற்றப்பட்டது.
தொடர்ந்து, கோவிலை சீரமைக்க தன்னார்வலர்கள் பலர் வந்து பார்வையிட்டு சென்றனர். ஆனாலும், பணிகள் ஏதும் ÷ மற்கொள்ளப்படாததால், கோவில் மீண்டும் புதருக்குள் மறைந்து வருகிறது. இதே போல், கிராமத்தின் தென்மேற்கில் உள்ள பெருமாள் கோவிலும், சிதைந்து பாழடைந்து வருகிறது. கோவில் மேல்தளத்தில் மிகப்பெரிய மரங்கள் வளர்ந்துள்ளன. ஆனாலும், கோவிலின் உட்புறம் மிகவும் பொலிவுடன் காணப்படுகிறது. இந்த கோவில்களின் வரலாறு குறித்து, எந்த தகவலும் பகுதிவாசிகளிடம் இல்லை. பழமையான இந்த கோவில்கள் நுாற்றாண்டுகளை கடந்து இருக்கும் என்பதால், இதற்கு பின்னால் சிறப்பான வரலாறு நிச்சயம் உண்டு. ஒரு பழம்பெருமை வாய்ந்த ஆன்மிக தலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பது கிராமவாசிகளின் நம்பிக்கை. கோவிலை சீரமைத்து மீண்டும் பழமையை நிலை நாட்ட வேண்டும் என்பது இவர்களின் பிரார்த்தனையாக உள்ளது.