கொளஞ்சியப்பர் கோயிலில் சஷ்டி, கிருத்திகை வழிபாடு; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2025 05:09
விருத்தாசலம்; மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் சஷ்டி மற்றும் கிருத்திகை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம், மணவாளநல்லுார் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் சஷ்டி மற்றும் கிருத்திகை ஒட்டி, காலை சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு கொளஞ்சியப்பர் சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதேபோல், வேடப்பர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.