விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ லட்சுமி குபேரன் கோவிலில், நாளை ஆடி மாத நான்காம் வெள்ளி பூஜை நடக்கிறது. விழுப்புரம், கிழக்கு பாண்டிரோடு திருநகர் ஸ்ரீ மகாலட்சுமி ஸ்ரீ லட்சுமி குபேரன் கோவிலில், நாளை ஆடி மாத நான்காம் வெள்ளியை முன்னிட்டு, தாயாருக்கு காலை சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், இரவு 7.00 மணிக்கு தாயார் சன்னதி புறப்பாடு, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, தாயாருக்கு அலங்காரம் செய்த கண்ணாடி வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கப் படுகிறது.