கீழச்சிவல்பட்டி; திருப்புத்தூர் ஒன்றியம் ஆவிணிப்பட்டி பக்த ஜெயங்கொண்ட ஆஞ்சநேயர் கோயிலில் சுதர்ஷன மகாயாக லட்சார்ச்சணை நடந்தது. இக்கோயிலில் நேற்று அதிகாலையில் அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து கோ பூஜை நடந்தது. பின்னர் ஸ்ரீ சுதர்சனஜெயம், ஸ்ரீ ஆஞ்சநேயர் மூலமந்திர ஜெபம் நடந்தது. 151 கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. யாகசாலையில் வஸ்திரயாகம், புஷ்பயாகம், பழங்கள், நெய் உள்ளிட்ட பொருள்கள் இடப்பட்டு பூர்ணகுதி நடைபெற்று தீபாராதனை நடந்தது. பின்னர் சிவாச்சார்யர்களால் கலசங்கள் புறப்பாடாகி கோயிலை வலம் வந்தனர். தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி இரவு வரை நடந்தது. பின்னர் உற்சவர் திருவீதி உலா வலம் வந்தார். கீழச்சிவல்பட்டி, இளையாத்தங்குடி, சேவிணிப்பட்டி, கீரணிப்பட்டி பகுதியினர் பங்கேற்றனர்.