விழுப்புரம்: கப்பூர் முத்துவாழியம்மன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் அடுத்த கப்பூர் அமைச்சார் அம்மன், முத்துவாழியம்மன் கோவிலில், கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தேர் திருவிழா துவங்கியது. இதனையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து, இரவு வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து (ஆக.,12) வெள்ளிக்கிழமை தேர் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து, தேரில் எழுந்தருள செய்தனர். சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துக் கொண்டு, தேர் வடம் பிடித்து இழுத்தனர்.