தியாகதுருகம்: தியாகதுருகம் மாரியம்மன் கோவிலில் சாகைவார்த்தல் விழா நடந்தது.
தியாகதுருகம் சொர்ணாம்பிகை மாரியம்மன் கோவிலில் ஆடிமாத 4 வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெள்ளிகாப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி, மகா தீபாராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கோவில் முன்பு வைக்கப்பட்ட கொப்பரையில் கூழ்வார்த்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை அம்மனுக்கு படையலிட்டு, பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மன் திருவீதியுலா நடந்தது. பூஜைக்கான ஏற்பாடுகளை சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை தலைமையில் செய்திருந்தனர்.