பதிவு செய்த நாள்
13
ஆக
2016
12:08
புதுச்சேரி: ஆடி வெள்ளியை முன்னிட்டு, பிரத்தியங்கிரா காளிக்கு அபிஷேகம் செய்வதற்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில், ஆடி மாத செடல் உற்சவம் (ஆக.,12) வெள்ளிக்கிழமை நடந்தது. திண்டிவனம்– புதுச்சேரி சாலையில் உள்ள வழிதுணை அய்யனாரப்பன் கோவிலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். தேர் பவனியுடன், அக்னி கரகமும் எடுத்துச் செல்லப்பட்டது. பக்தர்கள் வேண்டுதலின்பேரில் வாயில் அலகு குத்தி சென்றனர். ஊர்வலம் மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில் முடிவடைந்ததும், ஜனார்த்தன சுவாமிகள் தலைமையில் பக்தர்கள் கொண்டு வந்த பால், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.