பதிவு செய்த நாள்
13
ஆக
2016
02:08
திருப்பூர்: ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, திருப்பூர் சுற்றுப்பகுதி கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
திருப்பூர், காந்திநகர், இ.பி., காலனியில் உள்ள கற்பகஜோதி ராஜவிநாயகர் கோவிலில், வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தது. ஆடி மாத கடைசி வெள்ளியான (ஆக.,12) வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்விக்கப்பட்டது.ஊஞ்சல் சேவைக்கு பின், பெண்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பங்கேற்று, வழிபாடு நடத்தினர்.