பதிவு செய்த நாள்
13
ஆக
2016
02:08
குளித்தலை: குளித்தலை பகுதியில், ஆடி வெள்ளி முன்னிட்டு, அப்பகுதி பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தனர். கரூர் மாவட்டம், குளித்தலையில், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு, வரலட்சுமி விரதம் இருந்த பெண்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளை செய்தனர். குறிப்பாக, குளித்தலை மகா மாரியம்மன், கடம்பவனேஸ்வரர் கோவில், பெருமாள்கோவில், அய்யர்மலை ரத்தினகிரீஸ்ரர், மேட்டுமருதுார் அங்காளபரமேஸ்வரி கோவில், சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவில், ஆர்.டி.மலை சிவன் கோவில், தோகைமலை கருப்பசாமி கோவில், சின்னரெட்டிப்பட்டி சிவன் கோவில்களில் விழா நடந்தது.