Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக் கோயில் ரோப்கார் நாளை ... அரவிந்தர் பிறந்த நாள் விழா: ஆரோவில்லில் போன் பயர் அரவிந்தர் பிறந்த நாள் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் திருமேனியை பாதுகாக்கும் ரகசியம்!
எழுத்தின் அளவு:
ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் திருமேனியை பாதுகாக்கும் ரகசியம்!

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
11:08

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீராமானுஜர் அவதரித்த, 1,000மாவது ஆண்டு விழா அடுத்த ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீ ராமனுஜரின் திருமேனியை பருவ நிலைக்கு ஏற்ப பல நுாறு ஆண்டுகளாக பாதுகாக்கும் ரகசியத்தை இந்த பகுதியில் விரிவாக பார்ப்போம்.

ஸ்ரீபெரும்புதுாரில், 1,017ம் ஆண்டு, ராமானுஜர், சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ஆந்திர மாநிலம் திருப்பதி, கர்நாடக மாநிலம் மேலக்கோட்டைதிருநாராயணபுரம் ஆகிய பல திவ்ய தேசங்களில் வாழ்ந்து, ஆன்மிக பணிகளிலும் சமய சீர்திருத்த பணிகளையும், வைணவத்தை தழைத்தோங்கச் செய்ய, விசிஷ்டாத்வைதம் என்ற உயரிய கோட்பாட்டையும் வகுத்து தந்தார்.பல கோவில் கோட்பாடுகளையும், பூஜை முறைகளையும் வகுத்து தந்தார். சிறந்த மகானாகவும், தலைச்சிறந்த வைணவ ஆச்சாரியராகவும் திகழ்ந்தார்.

ராமானுஜர் பற்றி பிற்கால தலைமுறையினர் அறிய, அவர் வாழ்ந்த காலத்திலேயே ராமானுஜர் போல, இரண்டு உற்சவ விக்ரங்களை பிரதிஷ்டைச் செய்தனர். அவற்றுள் ஒன்றை, ராமானுஜர், ஆரத் தழுவி தன் உடலில் இருந்த ஆத்மசக்தி முழுவதையும் அதில் பிரதிஷ்டை செய்தார்.இந்த திருமேனி, தானுகந்த திருமேனி (ராமானுஜரே மிகவும் உகந்த திருமேனி) என்று அழைக்கப்படுகிறது. இதேபோன்று மற்றொரு திருமேனியை திருநாராயணபுரத்தில் பிரதிஷ்டைச் செய்தனர். அது, தமக்குகந்த திருமேனி , அதாவது, அடியார்கள் மிகவும் உகந்த திருமேனி என, அழைக்கின்றனர்.ராமானுஜர், 120 ஆண்டுகள் வாழ்ந்து, இறுதியாக ஸ்ரீரங்கத்தில் ஜீவித காலத்திற்கு பின் அவருடைய திருமேனியை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது, தானான திருமேனி என, அழைக்கப் படுகிறது.

வெந்நீர், போர்வை, சந்தனம்...
ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராமானுஜர் திருமேனி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், மூலம் நட்சத்திரம் அன்று ஸ்ரீ மணவாள மாமுனிகளின் அவதார திருநாள் தொடங்கி, தை மாதம் ஹஸ்தம் நட்சத்திரம் அன்று, ஸ்ரீ கூரத்தாழ்வாரின் அவதார தினம் வரை உள்ள இடைப்பட்ட மழைக் காலம் மற்றும் குளிர் காலங்களில், ராமானுஜரின் உற்சவ திருமேனிக்கு திருமஞ்சனம் செய்யும் போதும், திருவாராதனம் செய்யும் போதும், வெந்நீரை உபயோகிக்கின்றனர்.மேலும், அந்த காலங்களில், இரவு நேரங்களில் ராமானுஜரின் திருமேனிக்கு குளிராமல் இருப்பதற்கு, சால்வைகள், ரஜாய் எனப்படும் போர்வைகள் சாற்றப்பட்டு மிகவும் பாதுகாக்கின்றனர். இதேப்போல் கோடை காலத்தில் மிகவும் குளிர்ந்த, துாய்மையான நீரில் திருமஞ்சனம் செய்கின்றனர்.அதிக வெப்பம் உள்ள காலங்களில் வெப்பத்தால் ஏற்படும் சூட்டை தணிக்க, அவருடைய திருமேனியின் பின்புறம் சந்தனம் பூசப்படுகிறது. இந்த மரபு, தொடர்ந்து பல நுாறு ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக போற்றி பாதுகாத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

தானுகந்த திருமேனி:
இந்தியாவில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் ராமானுஜரின் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்படுகிறது. இதில் இந்த இரண்டு திருமேனி விக்ரங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.இவை தொடர்ந்து பல வருடங்களாக வழிபட்டு,பாதுகாக்கப்படுகின்றன. இதில், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த தானுகந்த திருமேனியை வைணவ அடியார்கள், கோவில் கைங்கர்யகாரர்களும், பல நுாறு ஆண்டுகளாக மிகவும் பாதுகாப்பாக பாதுகாத்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று செவ்வாய்க்கிழமை காலையில் திருமலையில் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar