பழநி: பழநி மலைக் கோயில் ரோப்கார், பராமரிப்பு பணிக்காக நாளை (ஆக.,17) மட்டும் நிறுத்தப்படும்.மலைக் கோயிலுக்கு பக்தர்கள் மூன்று நிமிடத்தில் செல்லும் வகையில் ரோப்கார் இயக்கப்படுகிறது. நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளது.பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்ட பின், ஆக.,18 காலை முதல் மீண்டும் இயக்கப்படும்.