பதிவு செய்த நாள்
16
ஆக
2016
12:08
ஆத்தூர்: ஆத்தூர், திருவிழி அம்மன் கோவிலில் நடந்த, திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர், ராணிப்பேட்டை, சிவாஜி தெருவில், திருவிழி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், உலக நன்மை, மழை மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி, திருவிளக்கு பூஜை நடந்தது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, விளக்கு ஏற்றி வைத்து, திருவிழி அம்மனை வழிபாடு செய்தனர். அபிராமி அம்மன் அலங்காரத்தில், திருவிழி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.