புதுச்சேரி முன்னாள் முதல்வர் விருத்தாசலத்தில் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2016 12:08
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி, நேற்று பகல் 12:00 மணியளவில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்த ரங்கசாமி, கோவிலில் வளர்க்கப்படும் மான்களுக்கு காய்கறிகள் வழங்கினார்.