பதிவு செய்த நாள்
17
ஆக
2016
12:08
திண்டிவனம்: திண்டிவனம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, சமபந்தி விருந்து நடந்தது. திண்டிவனம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், சமபந்தி விருந்தில், நகர்மன்ற தலைவர் வெங்கடசன், தாசில்தார் மதியழகன், அ.தி.மு.க., நகர செயலாளர் தீனதயாளன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திண்டிவனம் கோர்ட் வளாகத்தில், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பரணிதரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி செல்வமுத்துக்குமாரி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி புகழேந்தி, வழக்கறிஞர் சங்க தலைவர் அய்யனார், வழக்கறிஞர்கள் விஜயன், மணிபாங்கு, அருண்பிரசாத் கலந்துக் கொண்டனர்.