ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவிலில், ஆடி இறுதி செவ்வாய்க்கிழமையையொட்டி, காட்டேரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு, பால், தயிர், பன்னீர், மஞ்சள், குங்குமம் உட்பட பல்வேறு பொருட்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பூஜைகளை அர்ச்சகர் சரவணன் மேற்கொண்டார். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.