பதிவு செய்த நாள்
17
ஆக
2016
12:08
கரூர்: ஆவணி மாதம் இன்று துவங்குவதையொட்டி, கரூர் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை சற்று உயர்ந்தது. ஆடி மாதத்தில், சுப முகூர்த்தங்கள் இல்லாத நிலையில், பூக்களின் விலை சராசரியாக இருந்தது. இந்நிலையில், இன்று ஆவணி மாதம் துவங்குகிறது. வரும் கார்த்திகை மாதம் வரை, திருமணம் உள்ளிட்ட சுப விஷேச நாள் அதிகளவில் இருக்கும் என்பதால், கரூர் பூ மார்க்கெட்டில், நேற்று பூக்களின் விலை சற்று உயர்ந்தது. மல்லிகை பூ கிலோ, 300 ரூபாயில் இருந்து, 400 ரூபாய்க்கும், முல்லைப்பூ கிலோ, 200 ரூபாயில் இருந்து, 300 ரூபாய்க்கும், அரளிப்பூ கிலோ, 150 ரூபாயில் இருந்து, 180 ரூபாய்க்கும், ஜாதிப்பூ கிலோ, 150 ரூபாயில் இருந்து, 180 ரூபாய்க்கும் விலை உயர்ந்திருந்தது. கரூர், மாரியம்மன் பூ மார்க்கெட் சங்க தலைவர் முருகேசன் கூறுகையில், ”கடந்த ஆடி மாதம் பூக்கள் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால், போதிய விலை இல்லை. ஆவணி மாதம் துவங்கிய நிலையில், பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், பூ கட்டும் தொழிலாளிகள், மாலை தொடுப்பவர்கள், நார், நூல் வியாபாரிகளுக்கு அதிக வேலை கிடைக்கும்,” என்றார்.