சாயல்குடி,:சாயல்குடி அருகே எஸ்.வாகைக்குளத்தில் வாழவந்தாள் அம்மன் கோயில் உள்ளது. இங்கு முளைக்கொட்டு விழாவிற்கான காப்பு கட்டு கடந்த ஆக., 9ல் நடந்தது. நாள்தோறும் கும்மியாட்டம், கோலாட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பெண்கள் பொங்கலிட்டும், நெய் விளக்கேற்றியும் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரியுடன் ஊர்வலமாக சென்று கண்மாயில் கரைத்தனர்.