கடலுார்: கூத்தப்பாக்கம் ராகவேந்திரா சுவாமிகள் கோவிலில் ஆராதனை விழா நாளை துவங்குகிறது. கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரா சுவாமிகள் கோவிலில் 345ம் ஆண்டு ஆராதனை விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல், 21ம் தேதி வரை தினமும் காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், நிர்மால்யம், வேத பாராயணம், 9:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, பகல் 12:00 மணிக்கு ஹஸ்தோதகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீமத்வ சித்தாந்த சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.