பதிவு செய்த நாள்
18
ஆக
2016
12:08
திருவள்ளூர்: திருவள்ளூர், ராகவேந்த்ர சுவாமி மடத்தில், வரும் 20ம் தேதி, 10,008 மகா தீபோத்சவம் நடக்கிறது. ராகவேந்த்ரர் பிருந்தாவனத்தில் பிரவேசம் செய்த நாள், அவருடைய ஆராதனை நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 345வது ஆராதனை மகோத்சவம் வரும், 20ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, திருவள்ளூர் தெற்கு குளக்கரை தெருவில் உள்ள ராகவேந்த்ர சுவாமி மடத்தில், வரும் 19ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, சத்யநாராயண பூஜை நடைபெறுகிறது. மறுநாள் 20ம் தேதி, காலை 6:00 மணிக்கு, ஹரிவாயுஸ்துதி ஹோமம் நடைபெறுகிறது. தொடர்ந்து, 9:00 மணியளவில், ராகவேந்த்ர சன்னிதியில் விசேஷ அபிஷேகம், அலங்காரம் மற்றும் இன்னிசை கச்சேரி நடைபெறும். அன்று, மாலை 5:45 மணிக்கு, வேங்கடேச மகிமை என்னும் தலைப்பில் சிறுவர்கள் நடத்தும் ஹரி கதை நிகழ்ச்சியும், மாலை 7:00 மணிக்கு, 10,008 மகா தீபோத்சவம் நடைபெறுகிறது.