பதிவு செய்த நாள்
19
ஆக
2016
11:08
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆவணி மூல திருவிழா கொடியேற்றம் ஆக.,28 காலை 8:30 மணிக்கு மேல் 8:54 மணிக்குள் நடக்கிறது.இணை கமிஷனர் நா.நடராஜன் கூறியதாவது: ஆவணி மூல திருவிழா ஆக., 28 முதல் செப்., 14 வரை நடக்கிறது. இதை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் நான்கு ஆவணி மூல வீதிகளில் பஞ்ச மூர்த்திகளுடன் திருவீதி உலா வந்தும், மண்டகப்படிகளில் எழுந்தருளியும் கோயில் சேத்தியாகும். ஆக., 28 முதல் செப்., 2 வரை காலை, இரவு சந்திரசேகர் உற்சவம் இரண்டாம் பிரகாரம் புறப்பாடு நடக்கிறது. செப்., 3ல் கருங்குருவிக்கு உபதேசம். செப்.,4ல் நாரைக்கு மோட்சம் அருளும் லீலை. செப்.,5ல் மாணிக்கம் விற்ற லீலை. செப்.,6ல் தருமிக்கு பொற்கிழிஅருளிய லீலை. செப்.,7 ல் உலவாக்கோட்டை. செப்.,8 ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது. இரவு திருஞானசம்பந்தர் சைவ சமய வரலாறு லீலை. செப்.,9 வளையல் விற்ற லீலை. இரவு 7:5 மணிக்கு மேல் இரவு 7:29 மணிக்குள் சுவாமி பட்டாபிஷேகம்.
செப்.,10 நரியை பரியாக்கிய லீலை (குதிரை கயிறு மாறிய லீலை). செப்.,11 மதியம் 2:35 முதல் மதியம் 2:59 மணிக்குள் புட்டுக்கு மண் சுமந்த லீலை. செப்.,12 விறகு விற்ற லீலை. செப்.,13 சட்டத்தேர். செப்.,14 தீர்த்த உற்சவ முடிவு (இரவு திருவீதி புறப்பாடு முடிந்து 16 கால் மண்டபத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், திருவாதவூர் மாணிக்கவாசகர் சுவாமியும் விடை பெறுதல்). செப்.,11 புட்டு உற்சவத்தன்று அதிகாலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி புட்டுத்தோப்பு சென்று அங்கு புட்டு உற்சவம் நடக்கும். இரவு கோயில் வந்து சேத்தி யாகும் வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். உற்சவ நாட்களில் கோயில், உபயதாரர்கள் சார்பாக தங்கக்கவசம், வைரக்கிரீடம் சாத்துப்படி, உபய திருக்கல்யாணம், தங்க ரதம் உலா ஆகிய சேவைகள் நடத்த இயலாது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செய்து வருகின்றனர் என்றார்.