பதிவு செய்த நாள்
26
செப்
2011
11:09
மதுரை: மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோயிலில் செப்.,28 முதல் அக்.,6 வரை நவராத்திரி விழா நடக்கிறது.தினமும் மாலை சுவாமி அலங்காரமும், கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன. செப்.,28ல் ராஜராஜேஸ்வரி அலங்காரமும், செப்.,29ல் தட்சிணாமூர்த்தி அலங்காரமும், செப்.,20ல் ஊஞ்சல் அலங்காரமும் நடக்கிறது.அக்.,1ல் விறகு விற்ற லீலை, 2ல் அர்த்தநாரிஸ்வரர், 3ல் திருக்கல்யாணம், 4ல் வளையல் விற்ற லீலை, 5ல் மகிஷாசுரமர்த்தினி, 6ல் சிவபூஜை அலங்காரமும் நடக்கின்றன. ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி ஜெயராமன், பேஷ்கார் பகவதி செய்து வருகின்றனர்.