பழநி : நவராத்திரி விழாவை முன்னிட்டு, பழநி கோயிலில் செப்., 28 முதல் தங்கரத புறப்பாடு இருக்காது. மலைக்கோயிலில் கட்டளைதாரர் மூலம் விழா நாட்கள் தவிர, இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடக்கும். செப்., 28 முதல் அக்., 6 வரை, மலைக்கோயிலில் நவராத்திரி விழா நடக்கிறது. போகர் சன்னதி புவனேஸ்வரி அம்மன் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதனால் ஒன்பது நாட்களுக்கு, தங்கரத புறப்பாடு இருக்காது என, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், தேவஸ்தானம், மலைக்கோயில், தண்டபாணி நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.