தும்மல் வந்தால் சாதாரணமாக இருந்து விடக்கூடாது. தும்மல் சமயத்தில் நம் இதயம் சற்று நின்று மீண்டும் இயங்குகிறது. இதயம் நின்றால் உயிர் போய்விடும் என்ற இயற்கை நியதியையும் மீறி நமக்கு உயிர் கிடைக்கிறது. இதற்கு காரணம் இறைவனின் சக்தியே. இவ்வாறு ஒவ்வொரு தும்மலின் போதும், நமக்கு உயிரை மீட்டுத்தரும் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டியது நம் கடமை. நபிகள் நாயகம் இது பற்றி சொல்லும் போது, உங்களில் ஒருவர் தும்மலிட்டால், அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லட்டும். தும்மலிடும் போது அவரருகே சகோதரரோ, தோழரோ இருந்தால், எர்ஹகமுகல்லாஹ் (அல்லாஹ் உமக்கு அருள் செய்வானாக) என்று சொல்ல வேண்டும். அதன்பின் தும்மலிட்டவர் மீண்டும், எஹ்தீகுமல்லாஹூ வயுஸ்லிஹ் பாலகும் (அல்லாஹ் உமக்கு நேர்வழி காட்டுவானாக) என்று சொல்ல வேண்டும், என்கிறார். தும்மலிடும் போது, ஒருவருக்கொருவர் இப்படி பேசிக் கொண்டால், அவ்விருவர் மத்தியிலும் நேசம் வளரும்.