வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக பூணுால் அணிவிக்கும் பவித்ர உற்ஸவ விழா நடந்தது. இவ்விழா நேற்று முன்தினம் காப்புக்கட்டுடன் துவங்கியது. சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமஞ்சன வழிபாடு, திவ்ய பிரபந்த பாராயணம் நடந்தது. 2ம் நாளான நேற்று யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி, தாயார்களும் கோயில் மைய மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் மூவருக்கும் பூணுால் எனப்படும் பவித்ர மாலை அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் ’கோவிந்தா’கோஷமிட்டு பூக்களை துாவி வழிபட்டனர். கோயில் சேவா சமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், தலைவர் ராஜகோபாலன், கோயில் செயல் அலுவலர் சுந்தர்ராஜன் ஏற்பாடு செய்தனர்.