பதிவு செய்த நாள்
22
ஆக
2016
12:08
அன்னுார்: பூலுவபாளையம் விநாயகர் கோவில், சீதளா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஒட்டர்பாளையம் ஊராட்சி, பூலுவபாளையத்தில், பழமையான சீதளா மாரியம்மன் கோவிலும், விநாயகர் கோவிலும் உள்ளன. மாரியம்மன் கோவிலில், மூலஸ்தானம், முன் மண்டபம், விமான கோபுர திருப்பணிகள் செய்யப்பட்டன. இத்துடன் விநாயகர் கோவிலிலும் திருப்பணிகள் செய்யப்பட்டன. கோவில் கும்பாபிஷேக விழா 20ம் தேதி மாலை விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. இரவு காப்பு கட்டுதலும், மூலமந்திர ஹோமமும் நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், வேத பாராயணமும் நடந்தது. காலை 7:30 மணிக்கு விநாயகர் கோவில் விமான கோபுரத்திற்கும், 8:10 மணிக்கு சீதளா மாரியம்மன் மூலஸ்தானத்திற்கும் கும்பாபிஷேகமும் நடந்தது. குருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின், தச தானம், தச தரிசனம், மகா அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பூலுவபாளையம், ஆயிமாபுதுார் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.