எல்லையம்மன் கோவிலில் 15ம் ஆண்டு கூழ் வார்த்தல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2016 12:08
ஊத்துக்கோட்டை: ஸ்ரீஎல்லையம்மன் கோவிலில் நடந்த, 15ம் ஆண்டு கூழ் வார்த்தல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஊத்துக்கோட்டை ரெட்டித் தெருவில் உள்ளது எல்லையம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் கூழ்வார்த்தல் விழா பிரசித்தி பெற்றது. நேற்று, 15ம் ஆண்டு கூழ் வார்த்தல் விழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிேஷகப் பொருட்களால் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. பகுதிவாசிகள் ஒவ்வொருவரும் வீட்டில் இருந்து கூழ் எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அம்மனுக்கு படைத்த கூழ், பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.