பதிவு செய்த நாள்
23
ஆக
2016
12:08
செவ்வாய்பேட்டை: சேலம், செவ்வாய்பேட்டை சித்தி விநாயகர், ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசங்கள் சாத்துபடி நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை 9 மணியளவில், உற்சவர் விநாயகர், ஆஞ்சநேயருக்கு, வெள்ளி கவசங்கள் அணிவித்து, வீதியுலா புறப்பாடு நடந்தது. மாரியம்மன் தேர்வீதி, அப்புசெட்டிதெரு, கபிலர் தெரு, பெரிய எழுத்துக்காரதெரு, செவ்வாய்பேட்டை பஜார், அப்பாசாமி தெரு வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, மூலவர் விநாயகர், ஆஞ்சநேயருக்கு ஹோமம், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், வெள்ளி கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்த விநாயகர், ஆஞ்சநேய பெருமானுக்கு, தீபாராதனை செய்யப்பட்டது.