பதிவு செய்த நாள்
23
ஆக
2016
12:08
பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக.,20 மாலை 4 மணிக்கு அனுக்ஞை, சுவாமி விக்ரகங்கள் வீதிவலம் முடிந்து வாஸ்து சாந்தி நடந்தது. மறுநாள் காலை 5 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல் காலயாக பூஜைகள் துவங்கியது. இரவு 2 ம் கால யாகபூஜைகள், பூர்ணாகுதி நிறைவடைந்து, யந்த்ர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு மூன்றாம் கால பூஜைகள் துவங்கி, 9 மணிக்கு மகாபூர்ணாகுதி நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, விமான தலங்களை சென்றடைந்தன. காலை 10 மணிக்கு அர்ச்சகர்கள் ராஜன் அய்யர், மாருதிராம், கோபிநாத்சர்மா,ரவீந்திரரங்கய்யார் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர்.