கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அடுத்த ராயர்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு திருப்பணிகள் நடந்து கும்பாபி ஷேகம் நடந்தது. தினமும் அபிஷேக, அலங்காரத்துடன், 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜை நிறைவை ஒட்டி, கணபதி ஓமம் மற்றும், 108 சங்காபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பஜனை பாடல்கள் பாடப்பட்டன. தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.