Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ... கோவிந்தா... கோபாலா... கோஷம் முழங்க நம்பெருமாள் திருவீதியுலா! கோவிந்தா... கோபாலா... கோஷம் முழங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுமை வனமாக மாறும் அழகர்கோவில் வளாகம்!
எழுத்தின் அளவு:
பசுமை வனமாக மாறும் அழகர்கோவில் வளாகம்!

பதிவு செய்த நாள்

27 ஆக
2016
11:08

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் வளாகத்தை பசுமை வனமாக்க கோயில் இடத்தில் 500 மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வருகின்றனர். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் நடக்கின்றன. இவற்றில் 10 நாட்கள் நடக்கும் சித்திரை, ஆடித்திருவிழாவில் சுவாமியை தரிசிக்க வரும் வெளியூர் பக்தர்கள் கோயில் வளாக பகுதியில் தங்குகின்றனர்.மலை அடிவாரமான கோயில் கோட்டை வாசல் முதல் கோயில் நிர்வாகம் பள்ளிக்கூடம் வரை ஏராளமான மா, வேம்பு, நாவல் போன்ற மரங்கள் இருந்தன. இவை பல ஆண்டுகளுக்கு முன் வெயிலில் கருகின. இதனால் திருவிழாவின் போது கோயிலில் தங்கும் பக்தர்கள் நிழல் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர்.பக்தர்கள் வசதிக்காகவும், கோயில் வளாகத்தை பசுமை வனமாக்கவும் மாற்றுவதற்காக கோட்டை வாசல் முதல் கோயில் வரை வடக்கு பகுதியில் உள்ள 7 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வகையான 500 மரக்கன்றுகளை கோயில் நிர்வாகத்தினர் வைத்து, சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பராமரித்து வருகின்றனர். மேலும் 200 மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளனர். இதேபோல் தேர் வலம் வரும் பகுதி முழுவதும் மரக்கன்றுகளை வைத்து பராமரித்தால் கோயில் வளாகம் சோலை வனமாக மாறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கங்கை நீரை சாதுக்கள் ... மேலும்
 
temple news
கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ ஆபத்சஹாய ... மேலும்
 
temple news
புதுச்சேரி; குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட ... மேலும்
 
temple news
நாகர்கோவில்;சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar