திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2011 11:09
கும்பகோணம்: திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் ஞானாம்பிகை சமேத சாரபரமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டுள்ள ரினவிமோசன லிங்கேஸ்வரருக்கு பிரதி திங்கள் தோறும் மூன்று கால சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடு நடைபெறுவது சிறப்பு. சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அதன்படி நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை சாரபரமேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஒரே நேரத்தில் நந்திபெருமானுக்கும், சாரபரமேஸ்வரருக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. பிரதோஷ வழிபாட்டில் திரளான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை ஆலய அர்ச்சகர் சுந்தரமூர்த்தி குருக்கள் செய்தார். ஏற்பாடுகளை தக்கார் கிருஷ்ணகுமார், நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.