பதிவு செய்த நாள்
29
ஆக
2016
12:08
செவ்வாய்பேட்டை: செவ்வாய்பேட்டை மாரியம்மனுக்கு, நேற்று, 108 திருவிளக்கு பூஜை செய்து, பெண்கள் வழிபட்டனர். செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகையையொட்டி, நேற்று முன்தினம், அம்மனுக்கு, 1,008 கிலோ நெய் அபிஷேகம் நடந்தது. நேற்று, 20ம் ஆண்டு உற்சவ விழா மற்றும் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. காலை, 6 மணிக்கு, கணபதி ஹோமம், 9.30 மணியளவில் பால்குட திருமஞ்சன ஊர்வலம், 11.45 மணிக்கு மகா அபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. இரவு, 8 மணியளவில், அம்மனை நினைத்து, வேத மந்திரங்கள் ஓதி, 108 திருவிளக்கு பூஜை செய்து, பெண்கள் வழிபட்டனர். லட்சுமி, சரஸ்வதி சகிதமாக, செவ்வாய்பேட்டை மாரியம்மன், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.