பதிவு செய்த நாள்
30
ஆக
2016
12:08
தலைவாசல்: தலைவாசல், சித்தேரியில் ஆவணி மாதத்தை முன்னிட்டு, மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. நேற்றுமுன்தினம் காலை, மாரியம்மனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், அலகு குத்தி, பூச்சட்டி எடுத்து, பக்தர்கள் வந்தனர். மதியம், சிறப்பு பூஜை செய்து, அலங்கரிக்கப்பட்ட தேரில், மாரியம்மன், செண்டை மேளம் முழங்க, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.