திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷகம், வரும் 4ம் தேதி நடக்கிறது. திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தில் பழமையான தர்மராஜா‚ திரவுபதியம்மன்‚ மாரியம்மன் மற்றும் பரிவாரமூர்த்திகள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, திருவிழாவிற்கு தடைவிதிக்கப்பட்டு, நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து இரு தரப் பினரிடையே சுமூகநிலை ஏற்பட்டு, கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சட்டம்-ஒழுங்கு பிரச்னை காரணமாக கும்பாபிஷேகம் நடத்துவதற்கு, போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென தடை விதித்தனர். கிராம பொதுமக்களின் நீண்ட முயற்சிக்குப்பின், கும்பாபிஷகம் நடத்த அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து அடுத்த மாதம் 4ம் தேதி கும்பாபிஷகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அன்று காலை 7:30 மணிக்கு கணபதி ேஹாமம்‚ மூலமந்திரஜபம்‚ தத்வார்ச்சனை‚ மகா பூர்ணாஹூதி‚ கடம் புறப்பாடாகி 9:00 மணி அளவில் மூலகலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை குலதீபமங்கலம் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.